×

பஞ்சாபில் உயிரிழந்த திண்டிவனம் ராணுவ வீரர் உடல் அடக்கம்

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் பெரிய தெருவை சேர்ந்தவர் அமுல்குமார்(45). ராணுவ வீரரான இவர், பஞ்சாப் அமிர்தசரஸ் பகுதியில் பணிபுரிந்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக விடுப்பில் இருந்த இவர், மீண்டும் பணிக்கு சென்றுள்ளார். கடந்த 6ம் தேதி பஞ்சாபில் தனது அறையில் இருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அமுல்குமார் உயிரிழந்ததாக தெரிகிறது.

அவரது உடல் நேற்று சொந்த ஊரான சாரம் கிராமத்திற்கு எடுத்துவரப்பட்டது. குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன், 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

The post பஞ்சாபில் உயிரிழந்த திண்டிவனம் ராணுவ வீரர் உடல் அடக்கம் appeared first on Dinakaran.

Tags : Dindivanam ,Punjab ,Amul Kumar ,Saram Periya Street, Villupuram District ,Amritsar, Punjab ,
× RELATED திண்டிவனம்-வந்தவாசி சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்