- இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் வழிகாட்டுதல்
- புது தில்லி
- இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம்
- தின மலர்
புதுடெல்லி: கல்லீரல் மற்றும் புற்றுநோய் தொடர்பான 2 போலி மருந்துகள் பற்றி விழிப்புடன் இருக்குமாறு மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாடு இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. கல்லீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தரப்படும் டிஃபிடெலியோ மற்றும் டகேடா மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் புற்று நோயாளிகளுக்கான அட்செட்ரிஸ் ஊசி ஆகிய இரண்டு மருந்துகளிலும் போலிகள் கலந்துள்ளதாகவும் இதில் டிஃபிடெலியோ இந்தியா, துருக்கி நாடுகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அதிகளவில் விற்பனையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்திருந்தது. இந்த மருந்துகள் குறித்து மருத்துவர்கள், நோயாளிகள், மருந்துவ வல்லுநர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இந்த போலி மருந்துகள் அதிகமாக நோயாளிகள் மூலமாகவும், இணையம் மூலமாகவும் அதிகம் விற்பனை செய்யப்படுதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போலி மருந்துகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிஃபிடெலியோ மற்றும் அட்செட்ரிஸ் ஊசிகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மருந்துகளை எடுத்து கொள்ளும் நோயாளிகள் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் அதுகுறித்து புகாரளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தைகளில் குறிப்பிட்ட இந்த மருந்துகளின் இயக்கம், விற்பனை, விநியோகம், இருப்பு ஆகியவற்றை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கும்படி மாநில, யூனியன் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
The post 2 போலி மருந்துகள் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும்: இந்திய மருந்து கட்டுப்பாடு இயக்குநரகம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.