×

பாரத் பெயர் மாற்றம் பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம்: பா.ஜ எம்.பி சர்ச்சை பேச்சு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில மேதினிப்பூர் தொகுதி பா.ஜ எம்.பியாக இருப்பவர் திலீப் கோஷ். நேற்று கரக்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசும்போது, இந்தியாவின் பெயர் பாரத் என்று மாற்றப்படுவது உறுதி. அதை விரும்பாதவர்கள் தாராளமாக நாட்டை விட்டு வெளியேறலாம். நாங்கள் மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் கொல்கத்தாவில் உள்ள எல்லா வெளிநாட்டவர் சிலைகளையும் அகற்றுவோம் என்று பேசியுள்ளார். மேலும், பா.ஜவின் மற்றொரு மூத்த தலைவர் ராகுல் சின்ஹா, ஒரு நாட்டுக்கு இரு பெயர்கள் தேவையில்லை.

ஜி-20 தலைவர்கள் இந்தியாவில் கூடியுள்ள இந்த சமயத்தில் இந்தியாவின் பெயரை மாற்றுவது பொருத்தமானதுதான் என்று தெரிவித்துள்ளார். இது பற்றி ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்தனு சென் கருத்து தெரிவிக்கையில், எங்களது ‘இந்தியா’ கூட்டணி குறித்து பயத்தில் உள்ள பா.ஜ, மக்களின் கவனத்தை திசை திருப்ப இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுகிறது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

 

The post பாரத் பெயர் மாற்றம் பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம்: பா.ஜ எம்.பி சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Bharat ,BJP ,Kolkata ,Dilip Ghosh ,Medinipur ,West Bengal ,Kharagpur ,Dinakaran ,
× RELATED கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது: பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்