×

மிதவை கப்பலில் 3 இடங்களில் சேதமடைந்துள்ளது கண்டுபிடிப்பு: மிதவை கப்பலை மீட்க மேலும் 2 நாட்களை ஆகலாம் என தகவல்

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே பாறையில் சிக்கிய மிதவை கப்பலை மீட்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில் அதிக திறன் கொண்ட இழுவை கப்பலை கொண்டு மீட்க திட்டமிடப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 5 மற்றும் 6வது அணு உலையிற்கான நீராவி உற்பத்தி கலன் கடந்த செப்.7ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இழுவை கப்பல் மூலமாக கூடன்குளத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கூடங்குளம் அணுமின் நிலைய சிறிய அணு மின்நிலைய சிறிய துறைமுக நுழைவு பகுதியில் வந்தபோது இரும்பு கப்பலின் பின்னால் இழுத்து வரப்பட்ட மிதவை கப்பல் பாறை இடுக்கில் சிக்கியது. அப்போது அலையின் காரணமாக மிதவை படகின் ஒரு பகுதி அருகில் உள்ள பாறையின் பகுதியின் அமர்ந்து சரித்த நிலையில் காணப்பட்டது.

இதன் மீட்பு பணி நேற்று காலை தொடங்கிய நிலையில் அலையின் சீற்றத்தின் காரணமாக மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னை துறைமுகப் பகுதியில் இருந்து சிறப்பு வல்லுநர்கள் குழு இன்று காலை அந்த பகுதிக்கு வந்து மிதவை கப்பலை ஆய்வு மேற்கொண்டது.

மிதவை படகு மூன்று இடங்களில் சேதமடைந்துள்ளதால் அவற்றை சரி செய்யும் பணியில் மும்பையைச் சேர்ந்த குழுவினர் ஈடுபட்டனர். மிதவை படகு பாறையில் மோதியதனால் 3 இடங்களில் சேதமடைந்துள்ளதாகவும் அதனை கடலுக்கடியில் சென்று வெல்டிங் செய்யும் பணிகளை மும்பை துறைமுக தொழில்நுட்ப குழுவினர் செய்தனர்.

சரிந்த நிலையில் இருந்த மிதவை படகை சமன் செய்து பாறையின் மேல் நிறுத்தி வைத்தனர். மேலும் மிதவை படகின் மற்ற பகுதிகளில் வெல்டிங் செய்யும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இழுவை படகின் மூலம் மிதவை கப்பல் இழுக்கப்பட்டது. ஆனால் அப்பொழுது கயிறு அறுந்து விட்டது.

தற்பொழுது அதிக விசைத் திறன் கொண்ட இழுவை படகை மும்பை துறைமுகத்திலிருந்து வரவழைத்து தான் மிதவை கப்பலை எடுக்க முடியும் என வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. இதனை தொடர்ந்து கொச்சி, மும்பையில் இருந்து அதிக விசைத் திறன் கொண்ட இழுவை படகை கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

The post மிதவை கப்பலில் 3 இடங்களில் சேதமடைந்துள்ளது கண்டுபிடிப்பு: மிதவை கப்பலை மீட்க மேலும் 2 நாட்களை ஆகலாம் என தகவல் appeared first on Dinakaran.

Tags : Nedangulam Nuclear Station ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...