×

தெ.ஆ.வுக்கு எதிரான 2வது ஒன்டே: 123 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய வெற்றி

புளோம்பாண்டீன்: தென்ஆப்ரிக்கா-ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் 2வது போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 106, மார்னஸ் லாபுசாக்னே 124 (99 பந்து, 19 பவுண்டரி, ஒரு சிக்சர்), டிராவிஸ் ஹெட் 64, ஜோஷ் இங்கிலிஸ் 50 ரன் எடுத்தனர். 50 ஓவரில் ஆஸி. 8 விக்கெட் இழப்பிற்கு 392 ரன் குவித்தது.

பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்க அணியில் டிகாக் 45, கேப்டன் பவுமா 46, டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென் தலா 49 ரன் எடுத்தனர். 41.5 ஓவரில் 269 ரன்னுக்கு தென்ஆப்ரிக்கா ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 123 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸி. பவுலிங்கில் ஆடம் ஜம்பா 4 விக்கெட் வீழ்த்தினார். மார்னஸ் லாபுசாக்னே ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் 2-0 என ஆஸி. முன்னிலை வகிக்க 3வது போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

நம்பர் 1 இடத்தில் ஆஸ்திரேலியா: தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது போட்டியில் வென்றதன் மூலம் ஆஸ்திரேலியா ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் புதிய தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா 121, பாகிஸ்தான் 120, இந்தியா 114, நியூசிலாந்து 106, இங்கிலாந்து 99, தென்ஆப்ரிக்கா 97, வங்கதேசம், இலங்கை தலா 92, ஆப்கன் 80, வெஸ்ட்இண்டீஸ் 68 புள்ளிகளுடன் முறையே டாப் 10 இடத்தில் உள்ளன.

The post தெ.ஆ.வுக்கு எதிரான 2வது ஒன்டே: 123 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய வெற்றி appeared first on Dinakaran.

Tags : T. R.A. ,Australian ,CB ,Flombandeen ,Australia ,South Africa ,. R.A. ,Dinakaran ,
× RELATED தொடரை வென்றது இந்தியா