×

கோவை, திருப்பூர், ஓசூர் பகுதிகளில் நகர்ப்புற வளர்ச்சி குழு கட்டமைப்பு: முதல்வருக்கு ஆ.ஹென்றி கடிதம்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர்- தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தமிழகத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் மாநகரங்களான கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் ஓசூர் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சீரற்ற வளர்ச்சிகளை ஒழுங்குபடுத்த முழுமையான திட்டங்களை கொண்டு, ஒழுங்கு மற்றும் சீரான அபிவிருத்தி மற்றும் விரிவான திட்டங்கள் மூலம் கட்டுமானங்களுக்கான திட்ட அனுமதியை விரைவுபடுத்தவும் நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் உருவாக்க வேண்டும்.

இத்தகைய தொலைநோக்கு திட்டத்தின்கீழ் கடந்த 2021-2022ம் ஆண்டு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்து, கடந்த 2022ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. எனினும், மேற்கண்ட பகுதிகளில் இதுவரை நகர்ப்புற வளர்ச்சி குழுமம் கட்டமைப்பதற்கான எவ்வித ஆக்கபூர்வமான செயல் திட்டங்கள் முன்னெடுக்காமல், கிணற்றில் போட்ட கல்லை போல் கிடப்பில் இருக்கிறது. இவற்றை விரைந்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் மேற்கண்ட பகுதிகளில் அடிப்படை வளர்ச்சி, உள்கட்டமைப்பு, கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை மாபெரும் வளர்ச்சி பெறும். தாங்கள் இதை கூடுதல் கவனத்தில் எடுத்துக் கொண்டு, மேற்கண்ட பகுதிகளில் நகர்ப்புற வளர்ச்சி குழுமங்களை நிறுவி, அதன் கட்டமைப்புகளை விரைந்து முடிக்க ஆலோசனைக் குழு மற்றும் திட்டமிடல் பிரிவுகளை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆ.ஹென்றி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The post கோவை, திருப்பூர், ஓசூர் பகுதிகளில் நகர்ப்புற வளர்ச்சி குழு கட்டமைப்பு: முதல்வருக்கு ஆ.ஹென்றி கடிதம் appeared first on Dinakaran.

Tags : Urban Development Group ,Govai, Tiruppur, Osur Regions ,A. Henry ,Chennai ,Tamil Nadu ,CM ,G.K. Stalin ,All India Real Estate Federation ,National President ,Dr. ,R. Henry ,Cove, Tiruppur, Osur Regions ,Henry ,Dinakaran ,
× RELATED மாநிலம் முழுவதும் பொறியாளர்களை ஒரே...