×

பாரதம் என சனாதனத்தை நிலைநிறுத்த முயன்றால் இந்தியா துண்டு, துண்டாகிவிடும்: வைகோ பேச்சு

பெரம்பூர்: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக. நகர் தெற்கு பகுதி திமுக சார்பில், ஓட்டேரி ஐந்து விளக்கு பகுதியில் தெற்கு பகுதி செயலாளர் சாமிகண்ணு தலைமையில், ‘’தமிழன் உயர குரல் கொடுத்தவர், தாய் போல் கலைஞர் அரவணைத்தவர்’’ என்னும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கலந்துகொண்டு பேசினர்.

சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி, தாயகம் கவி எம்எல்ஏ, இளைஞர் அணி அமைப்பாளர் லோகேஷ், துலுக்காணம் உள்ளிட்ட கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது; சந்திரகுப்தர், மௌரியர் என இந்திய வட பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் ஒருபோதும் தமிழ்நாட்டில் கால் வைத்ததில்லை. ஆனால் தமிழ்நாடு அரசர்கள் கங்கை வரை சென்று ஆட்சி செய்துள்ளனர். மலேசியா, தாய்லாந்து என்று வெளி நாடுகளை கைப்பற்றி ஆட்சி செய்தவர்கள் சேர, சோழ, பாண்டியர்கள். பாரதம் என சனாதனத்தை நிலை நிறுத்தினால், இந்தியா துண்டு, துண்டாக போய் விடும் என்பதை தற்போது உள்ள ஆட்சியாளர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

இந்தியா என்பது ஒரு நாடல்ல, அது மாநிலங்களால் இணைத்த ஒன்றியம். என்றைக்கு பாரத் என்று சொல்ல ஆரம்பித்து ஹிட்லர், முசோலினி போன்று சர்வாதிகாரிகளாக இவர்கள் செயல்பட்டால் இந்திய என்பது சுக்குநூறாக நொறுங்கிவிடும். இவ்வாறு வைகோ பேசினார். இதில் சுப.வீரபாண்டியன் பேசும்போது, ‘’ 6 மாநிலங்களின் 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் நம் இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றியின் முன்னோட்டம். ஏனென்றால் முன்பு அந்த 7 தொகுதிகளில் 5 தொகுதி பாஜக வசமும் 2 தொகுதி நம்மிடமும் இருந்தது. ஆனால் தற்போது 7 லில், 4 நம்மிடம், 3 அவர்களிடம் உள்ளது. திமுக எப்போதும் மத வழிபாட்டிற்கு எதிரானது கிடையாது. அதிக்கம், மூடநம்பிக்கைக்கு எதிரானது’’ என்றார்.

The post பாரதம் என சனாதனத்தை நிலைநிறுத்த முயன்றால் இந்தியா துண்டு, துண்டாகிவிடும்: வைகோ பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,Sanctum ,Bharatam: ,Perampur ,Eastern District of Chennai ,Artist Century ,South ,of ,Nagar ,Dizhagam ,Otteri ,Bharata ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...