×

ஊழல் ஒழிப்பு நாடகத்தோடு ஆட்சிக்கு வந்த பாசிஸ்ட்டுகள், ஊழலின் மொத்த வடிவமாக மாறிப்போயுள்ளனர்: அமைச்சர் உதயநிதி டிவிட்

சென்னை: மக்களின் கோபமும், I.N.D.I.A- வின் வலிமையும் 2024 தேர்தல் களத்தில் பாஜகவை மூழ்கடிக்கப்போவது உறுதி என அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கூறியுள்ளார். ஊழல் ஒழிப்பு நாடகத்தோடு ஆட்சிக்கு வந்த பாசிஸ்ட்டுகள், ஊழலின் மொத்த வடிவமாக மாறிப்போயுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடரபாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில்:
ஊழல் ஒழிப்பு நாடகத்தோடு ஆட்சிக்கு வந்த பாசிஸ்ட்டுகள், பணமதிப்பு நீக்கத்தில் தொடங்கி, ரஃபேல் ஊழல், சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்திய தேசிய நெடுஞ்சாலை ஊழல், ஆயுஷ்மான் பாரத் ஊழல், டோல்கேட் ஊழல் என ஊழலின் மொத்த வடிமாக மாறிப்போயுள்ளனர். ரூ.900 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழை நீர் ஒழுகுகிறது.

ரூ.2700 கோடியில் அமைக்கப்பட்ட G20 மண்டபத்தில் வெள்ளம் தேங்குகிறது. இப்படி எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதை மறைக்க மொழி – மதம் – கலவரத்தின் பின் ஒளிந்து கொள்ளும் பாஜகவை, மக்களின் கோபமும் – I.N.D.I.A- வின் வலிமையும், 2024 தேர்தல் களத்தில் மூழ்கடிக்கப்போவது உறுதி என தெரிவித்துள்ளார்.

The post ஊழல் ஒழிப்பு நாடகத்தோடு ஆட்சிக்கு வந்த பாசிஸ்ட்டுகள், ஊழலின் மொத்த வடிவமாக மாறிப்போயுள்ளனர்: அமைச்சர் உதயநிதி டிவிட் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Dwitt ,Chennai ,INDIA ,BJP ,2024 elections ,Udayanidhi Stalin ,
× RELATED முதல்வரின் சீரிய நடவடிக்கையால்...