×

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பள்ளி நடைபாதை

ஊட்டி: பராமரிப்பின்றி கிடக்கும் நடைபாதை (மேம்பாலம்) சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. ஊட்டியில் உள்ள எட்டினஸ் சாலை பகுதியில் சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 500க்கும் ேமற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி ஊட்டி – குன்னூர் சாலையோரத்தில் அமைந்துள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது.

இதனால், இப்பள்ளிக்கு வரும் மாணவிகள், பாம்பே கேசில் செல்லும் சாலையில் இருந்து பள்ளி மைதானத்திற்குள் மேம்பாலம் (நடைபாதை) அமைக்கப்பட்டது. ஆனால், இந்த நடைபாதையை மாணவிகள் முறையாக பயன்படுத்துவதில்லை. மேலும், இந்த நடைபாதையை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பதில்லை.
இதனால், தற்போது இந்த நடை மேம்பாலம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. எனவே, இந்த நடைபாதையை சீரமைத்து மாணவிகள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பள்ளி நடைபாதை appeared first on Dinakaran.

Tags : Ooty ,Etinus ,
× RELATED ஊட்டி படகு இல்லம் செல்லும் நடைபாதை சீரமைக்கப்படுமா?