×

ஆம்பூர் அடுத்த ஊட்டல் தேவஸ்தானத்தில் கூண்டில் சிக்கிய 40 குரங்குகள்: மலைக்காட்டில் விடப்பட்டது

ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த ஊட்டல் தேவஸ்தானத்தில் வைக்கப்பட்ட கூண்டில் 40 குரங்குகள் சிக்கியது. இதை பிடித்து மலைக்காட்டில் விட்டனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சியில் பைரப்பள்ளி அருகே ஊட்டல் தேவஸ்தானம் அமைந்துள்ளது. துருகம் காப்பு காட்டில் அமைந்துள்ள இந்த கோயிலில் சரஸ்வதி, நந்திதேவர், வேணுகோபாலசுவாமி, சப்த கன்னியர் கோயிலுடன் வற்றாத சுனையும் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக குரங்குகள் நடமாட்டம் அதிகரித்து வந்தது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் பைகளை அச்சுறுத்தி பிடுங்குவதும், கடிக்க வருவது போல் குழந்தைகளிடம் உள்ள தின்பண்டங்களை எடுத்து செல்வதுமாக இந்த குரங்குகள் செயல்பட்டு வந்தன. இதை சரி செய்ய பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் முறையிட்டனர். இந்நிலையில் நேற்று வன துறையினர் பாகாப்பான கூண்டுகளை வைத்ததில் 40 குரங்குகள் பிடிபட்டன. பின்னர், இந்த குரங்குகள் பத்திரமாக கொண்டு செல்லப்பட்டு தமிழக எல்லையோர மலைகாட்டில் விடபட்டன.

The post ஆம்பூர் அடுத்த ஊட்டல் தேவஸ்தானத்தில் கூண்டில் சிக்கிய 40 குரங்குகள்: மலைக்காட்டில் விடப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Ampur ,Devasthanam ,Oudal Devasthan ,Tiruppattur ,Noodal Devasthanam ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...