×

எல்லார்க்கும் எல்லாம்” என்ற திராவிடமாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று இன்றோடு 856 நாட்களாகிறது. 1000 ஆவது கோயில் கும்பாபிஷேகத்தை செப்.,10 அன்று மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் நிகழ்த்துகிறது இந்து சமய அறநிலையத்துறை. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் சராசரியாக தினம் ஒரு கோயிலில் குடமுழுக்கு நடந்து கொண்டிருக்கிறது. கோயில் நிலங்களை மீட்டது, கோயில் சொத்துக்களை முறைப்படுத்தியது, நிர்வாக சீர்கேடுகளை களைந்தது என பி.கே. சேகர் பாபு அமைச்சராக இருப்பது அறநிலையத்துறையின் பொற்காலம்.

“எல்லார்க்கும் எல்லாம்” என்ற திராவிடமாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன. 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை திமுக அரசு இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது

இன்றைய நாளில் 1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை நிகழ்த்தியிருக்கிறது. இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்குக் காரணமான அமைச்சர் சேகர்பாபு அவர்களையும் அதிகாரிகளையும் அலுவலர்களையும் பாராட்டுகிறேன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post எல்லார்க்கும் எல்லாம்” என்ற திராவிடமாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : CM. G.K. Stalin ,Stalin ,Chief Minister of ,Tamil ,Nadu ,1000 Temple Kumbabishekam West ,CM ,B.C. ,G.K. Stalin ,
× RELATED கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன்...