×

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 2,059-ஆக உயர்வு

மொராக்கோ: மொராக்கோவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 2,059-ஆக உயர்ந்துள்ளது. 2,012 பேர் காயம் அடைந்துள்ளனர். பூமிக்கு அடியில் 8.36 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7-ஆக பதிவானது. மொராக்கோ நாட்டில் நேற்று அதிகாலை 3.14 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடங்கள் இடிந்து விழுந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்

மொராக்கோ நாட்டில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான வரலாற்றுச் சிறப்புமிக்க மராகேஷிலிருந்து தென்மேற்கே 72 கி.மீ தூரத்தில் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பயங்கர நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த நில நடுக்கத்தால் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்ததில் அதில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 632 -ல் இருந்து 2059 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 2,012 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில். சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று மொராக்கோ அரசாங்கம் தெரிவித்துள்ளது. நில நடுக்கம் ஏற்பட்ட இடத்தில் மீட்புப்பணி விரைவாக நடந்து வருகிறது.

மேலும், இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதற்கிடையில், கடலோர நகரங்களான ரபாட், காசாபிளாங்கா மற்றும் எஸ்ஸௌயிராவிலும் இந்தவலுவான நடுக்கம் உணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

The post மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 2,059-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Morocco ,earth ,Fallout ,
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?