×

பதவி நீக்கப்பட்ட ராஜஸ்தான் மாஜி அமைச்சர் சிவசேனாவில் இணைந்தார்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் உதயபூர்வதி தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த ராஜேந்திர சிங் குதா தனது கட்சி மீதே விமர்சனம் செய்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அவர் சிவசேனாவில் இணைந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக்கெலாட் தலைமையிலான அரசில் பஞ்சாயத்துராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக பதவி வகித்தவர் ராஜேந்திர சிங் குதா. மணிப்பூரில் பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டது குறித்து சட்டசபையில் அசோக் கெலாட் தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக விமர்சனம் செய்ததையடுத்து அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவர் சிவசேனாவில் இணைவதாக அறிவித்துள்ளார். அவரது தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மகாராஷ்டிரா முதல்வரும் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே அவரது முடிவை வரவேற்பதாக தெரிவித்தார். மேலும், பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்ததில் அவரது அமைச்சர் பதவியையே இழந்த ராஜேந்திர சிங் குதாவை சிவசேனாவுக்கு வரவேற்பதில் மகிழ்வதாகவும் தெரிவித்தார்.

The post பதவி நீக்கப்பட்ட ராஜஸ்தான் மாஜி அமைச்சர் சிவசேனாவில் இணைந்தார் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Maji Minister ,Shivasenah ,Jaipur ,Rajendra Singh Kuda ,Congress ,Udhayapurvathi ,Shivasenna ,
× RELATED ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்...