×

தேசிய கல்வி கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தும்: ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் அரங்கில் ஆளுநரின் ‘எண்ணித்துணிக’ பகுதி- 9 வது நிகழ்வு நடைபெற்றது. இதில் தேசிய அளவில் விருது பெற்ற ஆசிரியர்கள் 24 பேருக்கு நினைவு பரிசு கொடுத்து கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ரவி பேசியதாவது: செயற்கை நுண்ணறிவு மிகவும் சிறந்த தொழில் நுட்பமாக உள்ளது. மனிதர்களை வழி நடத்தும் அளவிற்கு அதன் வளர்ச்சி இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் சுயமாக யோசிக்க முடியாது. அதுவரை மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக இடைவெளி உள்ளது.

போட்டி நிறைந்த உலகம் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை போட்டிக்காக தயார் செய்யும் மனநிலையிலேயே அணுகுகிறார்கள்.பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்புவது கிடையாது. இதற்கு முன் ஆசிரியர்கள் குழந்தைகளை தண்டித்தார்கள் அவர்களை நல்வழிப்படுத்தினார்கள. ஆனால் தற்போது மாணவர்களை தண்டிக்க சட்டத்தில் கூட இடம் கிடையாது. ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிப்பது அவர்களின் நல்லதுக்கு தான் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ளும் சூழல் தற்போது இல்லை. நான் நிச்சயமாக சொல்கிறேன் வரும் காலத்தில் தேசிய கல்விக் கொள்கை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

The post தேசிய கல்வி கொள்கை மாற்றத்தை ஏற்படுத்தும்: ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Governor R.R. N.N. Ravi ,Chennai ,Governor's' Numeringa ,Bharathiyar Arena ,Gindi Governor House ,Governor ,R. N.N. Ravi ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...