×

மபியில் பரபரப்பு சம்பவம் கோயில் கருவறைக்குள் நுழைய முயன்ற ராஜகுடும்ப பெண் கைது

பன்னா: மத்தியபிரதேசத்தில் ராஜ குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் கோயில் கருவறைக்குள் நுழைய முயன்றதால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மத்தியபிரதேச மாநிலம் பன்னா பகுதியை சேர்ந்த ஜூகல் கிஷோர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலகலமாக நடந்தது. கிருஷ்ணருக்கு பூஜைகள் நடந்து கொண்டிருந்த போது, அப்பகுதியின் ராஜ குடும்பத்தை சேர்ந்த மகாராணி ஜிதேஸ்வரி தேவி என்பவர் கருவறை முன்பாக நின்றிருந்தார்.

அலங்கார விசிறியால், கிருஷ்ணர் சிலைக்கு விசிறிக் கொண்டிருந்த அவர் திடீரென கருவறைக்குள் நுழைய முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பூசாரிகள் தடுக்க, பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். கோயில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்து, குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார் என கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் ஜிதேஸ்வரி தேவி மீது 295 ஏ, 353 ஆகிய பிரிவுகளின் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post மபியில் பரபரப்பு சம்பவம் கோயில் கருவறைக்குள் நுழைய முயன்ற ராஜகுடும்ப பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Mabi ,Panna ,Madhya Pradesh ,
× RELATED மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தானில் புதிய...