×

சோனியாவை சந்தித்தாரா அமரீந்தர் சிங்?

சண்டிகர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நான் சந்தித்ததாக கூறுவது வெறும் வதந்தி என்று மாஜி பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் தலைவராக இருந்த அமரீந்தர் சிங் அதிலிருந்து விலகி, 2021-ம் ஆண்டு பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி தொடங்கினார். 2022-ம் ஆண்டு நடந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்தது. தன் சொந்த தொகுதியிலேயே அவர் தோல்வியடைந்தார். அதனால் கட்சியை கலைத்து விட்டு, தன் மகன் மற்றும் மகளுடன் பா.ஜவில் இணைந்தார். இந்த நிலையில் சோனியா காந்தியை அவர் சந்தித்ததாக சமூக வலைதள பதிவு வெளியானது. அந்த செய்தியில் துளியும் உண்மையில்லை என்று அமரீந்தர்சிங் மறுத்துள்ளார்.

The post சோனியாவை சந்தித்தாரா அமரீந்தர் சிங்? appeared first on Dinakaran.

Tags : Amarinder Singh ,Sonia ,Chandigarh ,Punjab ,Chief Minister ,Amarinder ,Congress ,president ,Sonia Gandhi ,
× RELATED அரசுப்பள்ளியில் படித்து வந்த 390...