×

மாஜி எம்எல்ஏ மகன் மீது துப்பாக்கி சூடு ஓபிஎஸ் அணி செயலாளர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே சமூக ஆர்வலரான முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மகன் மீது துப்பாக்கி சூடு வழக்கில் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்தவர் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தியாகராஜன் மகன் தியாக இளையராஜா (46). சமூக ஆர்வலர். மணவாளநல்லூர் இயற்கை விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் அதிமுக ஓபிஎஸ் அணி கடலூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் புகழேந்தி ராஜா (25), இவரது சகோதரர் ஆடலரசு (22). இவர்களுக்கும், இளையராஜாவுக்கும் தேர்தல் முன் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இளையராஜா தனது விவசாய நிலத்துக்கு சென்றுவிட்டு திரும்பும்போது, புகழேந்தி ராஜா, ஆடலரசு மற்றும் சிலர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.இதில் படுகாயமடைந்த அவர் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, கடலூர் அருகே நேற்று அதிகாலை ஆடலரசு, புகழேந்தி ராஜா, வெங்கடேசன், சூர்யா உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த 2 கை துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஆடலரசு சென்னையை சேர்ந்த ஒருவரிடம் கூகுள் பே மூலம் ரூ.1 லட்சமும், ரொக்கமாக ரூ.2 லட்சமும் கொடுத்து துப்பாக்கி வாங்கியது தெரியவந்தது. அதன்பேரில் துப்பாக்கியை விற்ற சென்னை பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post மாஜி எம்எல்ஏ மகன் மீது துப்பாக்கி சூடு ஓபிஎஸ் அணி செயலாளர் கைது appeared first on Dinakaran.

Tags : OPS Team ,MLA ,Vridthachalam ,OPS ,Congress ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!