×

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் ஆயிரமாவது குடமுழுக்கு மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று நடக்கிறது: ஆன்மிகவாதிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 1,000வது குடமுழுக்கு, மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று நடக்கிறது. ஆன்மிகவாதிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள தொன்மையான கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் திருகுடமுழுக்கு நடைபெறாத கோயில்களை கண்டறிந்து அப்பணிகளையும் முழுவீச்சில் நடத்தி வருகிறது. அந்த வகையில், 1,000வது குடமுழுக்கு விழாவாக சென்னை, மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கவுமார மடம், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை வேளக்குறிச்சி ஆதீனம் சத்ய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சிவநெறிச் செம்மல் பிச்சை குருக்கள், சிவபுரம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சுவாமிநாத சிவாச்சாரியார், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சிவாச்சாரியார் செல்வ சுப்பிரமணிய குருக்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, வெ.கருணாநிதி, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு நாலாவது கால யாகசாலை வழிபாடும், தொடர்ந்து, சிறப்பு வேள்வியும் நிறைவு பெறுகிறது.

The post திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் ஆயிரமாவது குடமுழுக்கு மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று நடக்கிறது: ஆன்மிகவாதிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Mambalam Kasi Viswanadar ,Dishagam ,Chennai ,West Mambalam Kasi Viswanadar Temple ,Kasi Viswanadar ,West Mambalam Kasi ,Dizhagam ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...