×

கோயம்பேட்டில் 1 கிலோ தக்காளி ரூ.10க்கு விற்பனை

சென்னை: வரத்து அதிகரிப்பால் கோயம்பேட்டில் காய்கறிகள் விலை கடுமையாக சரிந்துள்ளது. அதில் தக்காளி மட்டும் கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில், கடந்த 2 மாதத்துக்கு முன்பு காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்தது. இதில் தக்காளியின் மட்டும் ஒரு கிலோ தக்காளிரூ.200, சென்னை புறநகரில் ஒரு கிலோ தக்காளிரூ.250க்கும் விற்பனை ஆனது. இந்நிலையில் படிப்படியாக வரத்து அதிகரித்து,ரூ.100லிருந்துரூ.50ரூ.30 என தக்காளி விலை இறங்கியது.

இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 650 வாகனங்களில் 7,000 டன் காய்கறிகள் வந்தன. இதனால் அனைத்து காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.10, வெங்காயம்ரூ.20, சின்ன வெங்காயம்ரூ.60, உருளைகிழங்குரூ.25, கேரட்ரூ.20, பீன்ஸ் ரூ.35 பீட்ரூட் ரூ.20, சவ்சவ் ரூ.15, முள்ளங்கி ரூ.30, முட்டைகோஸ், வெண்டைக்காய் ரூ.15, காராமணி ரூ.30, பாவக்காய் ரூ.20, புடலங்காய், சுரக்காய்,ரூ.10, சேனைக்கிழங்கு ரூ.40, முருங்கைக்காய் ரூ.25, காலிபிளவர் ரூ.15, பச்சைமிளகாய் ரூ.35 விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும் போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. இதனால் சென்னை புறநகர் சில்லரை வியாபாரிகள் மற்றும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்’’ என தெரிவித்தார்.

The post கோயம்பேட்டில் 1 கிலோ தக்காளி ரூ.10க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Coimpet ,Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…