×

துணைவேந்தர்கள் நியமன விவகாரம் கல்லூரி பேராசிரியர்கள் ஆளுநருக்கு கண்டனம்

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவை அமைத்த ஆளுநரின் உத்தரவிற்கு கல்லூரி பேராசிரியர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்து உள்ளன. கோவை பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான துணைவேந்தர்களை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவை ஆளுநர் அமைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் கல்லூரி பேராசிரியர்கள் சங்கங்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து இருக்கின்றன.

அதாவது, கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா மற்றும் அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம்), பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கம், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் ஆகியவை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அதில், ஆளுநரின் இந்த நடவடிக்கை சட்டசபையின் அதிகாரத்தை கையகப்படுத்துவதற்கு சமமானது. ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதனதன் சட்டங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. தேடுதல் குழு தொடர்பான உத்தரவுகளை வெளியிட மாநில அரசுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. பல்கலைக்கழக மானியக்குழு பிரதிநிதியை தேடுதல் குழுவில் நியமிப்பதை மாநில அரசு ஏற்கவில்லை.

The post துணைவேந்தர்கள் நியமன விவகாரம் கல்லூரி பேராசிரியர்கள் ஆளுநருக்கு கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Vice Chances Canonial Affair College ,Chennai ,Vice Chances Canonical Affairs College Professors ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...