×

சென்னையில் வார இறுதியில் ரூ.100க்கு ஒரு நாள் முழுவதும் ரயில் பயணம்: மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் டிவிட்டரில் வெளியிட்ட அறிவிப்பு: சென்னைமெட்ரோ ரயில்களில் பயணிகளின் வருகையை அதிகரிக்க பல்வேறு புதிய சலுகைகளை நிர்வாகம் அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி 100 ரூபாயில் நாள் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் சென்று வரும் வகையில் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது, ஒரு சுற்றுலா அட்டையை ரூ.150 கொடுத்து பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த சுற்றுலா அட்டை ஒரு நாள் மட்டுமே செல்லும். அந்த அட்டையை திருப்பிக் கொடுக்கும் போது மீதியுள்ள ரூ.50 திருப்பி தரப்படும் என சென்னை மெட்ரோ ரயில் டிவிட்டரில் அறிவித்துள்ளது.

The post சென்னையில் வார இறுதியில் ரூ.100க்கு ஒரு நாள் முழுவதும் ரயில் பயணம்: மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metro company ,Chennai Metro Railway Administration ,Twitter ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...