×

ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் இல்லை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


ஊட்டி: ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா செல்கின்றனர். இதற்காக இவ்விரு பூங்கார்களும் எப்போதும் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக அழகாக வைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் சீசனின் போது சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நிலையில் இவ்விரு பூங்காக்களிலும் மலர் பூத்துக் குலுங்கும் வகையில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்து காணப்படும்.

ஊட்டி ரோஜா பூங்காவும் சுற்றுலா பயணிகளுக்காக தயார் செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்து காணப்படும். முதல் சீசன் போன்று அதிக அளவு மலர்கள் இல்லாத போதிலும், பெரும்பாலான செடிகளில் மலர்கள் காணப்படும். இதனை வெளி மாநிலங்கள் மற்றும் வெளிய வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். ஆனால் இம்முறை முதல் சீசனின் போது மலர்கள் மிகவும் தாமதமாக பூத்தன. கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களை காட்டிலும் ஜூன், ஜூலை மாதங்களிலே ரோஜா பூங்காவில் மலர்கள் அதிகம் காணப்பட்டது.

இந்நிலையில், காற்றுடன் மழை அவ்வப்போது பெய்து வந்த நிலையில், ரோஜா செடிகளில் இருந்த மலர்கள் உதிர்ந்தன. தற்போதும் ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் நாள்தோறும் சாரல் அல்லது கனமழை பெய்கிறது. இதனால், ரோஜா பூங்காவில் உள்ள பெரும்பாலான செடிகளில் மலர்கள் உதிர்ந்து விட்டன. ஒரு சில செடிகளில் மட்டுமே மலர்கள் காணப்படுகிறது. இதன் காரணமாக ரோஜா பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

The post ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் இல்லை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Ooty Rose Park ,Ooty ,Nilgiris ,Dinakaran ,
× RELATED மழை காரணமாக பசுமைக்கு திரும்பிய ரோஜா பூங்கா