×

வரத்து அதிகரிப்பால் தக்காளி கிலோ ரூ10 ஆக சரிவு


சேலம்: சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், வாழப்பாடி, தம்மம்பட்டி, மேச்சேரி, மேட்டூர், ஓமலூர் உள்பட பல பகுதிகளிலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களிலும் தக்காளி பல நூறு ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் தக்காளியை விவசாயிகள் சேலம் கடைவீதி, வாழப்பாடி, ஆத்தூர் உள்பட பல பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு விற்பனைக்கு வரும் தக்காளியை சாலையோர வியாபாரி கள், சில்லரை வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர்.கடந்த மே, ஜூன் மாதங்களில் தக்காளி வரத்து சீராக இருந்ததால் கிலோ ரூ15 முதல் ரூ18 வரை விற்பனை செய்யப்பட்டது.

ஜூலை, ஆகஸ்ட்டில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மார்க் கெட்டுகளுக்கு தக்காளி வரத்து வழக்கத்தைவிட 70 சதவீதம் சரிந்தது. இதனால் தக்காளி விலை ரூ120 வரை சென்றது. ஆனால் கடந்த இரண்டு வாரமாக தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தரத்தை பொறுத்து கிலோ ரூ10 முதல் ரூ14 வரை விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post வரத்து அதிகரிப்பால் தக்காளி கிலோ ரூ10 ஆக சரிவு appeared first on Dinakaran.

Tags : Salem ,Attur ,Vazhappadi ,Dhamambatti ,Mechery ,Mettur ,Omalur ,Dharmapuri ,Krishnagiri ,Namakkal ,
× RELATED சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முட்டல் ஆணைவாரி அருவியில் குளிக்க தடை!