×

உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி20 மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

டெல்லி: ஜி20 அமைப்பின் 18வது உச்சி மாநாடு இன்று டெல்லி பிரகதி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்தியா தலைமையில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டின் கருப்பொருள் ‘வசுதைவ குடும்பகம் – ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்று பிரதமர் மோடி பிரகடனப்படுத்தி உள்ளார். இம்மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்ட ஒருசில தலைவர்களை தவிர ஏனைய தலைவர்கள் கலந்து கொண்டதால், டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

இம்மாநாட்டில் 37 பக்கம் கொண்ட டெல்லி பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சர்வதேச நிதி அமைப்புகளைச் சீரமைக்க ஜி20 தலைவர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்தை பகிர்ந்து கொள்வோம். உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. உக்ரைனில் அமைதி நீடித்தால் ஐ.நா. சபையில் அனைத்து நோக்கங்கள், கொள்கைகளை நிலைநிறுத்தும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில், ஐக்கிய நாடுகள் சபை எடுத்த நிலைப்பாட்டை வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவந்தது.

உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பாக ஜி20 மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நடைபெறும் போர்கள் மற்றும் நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகளால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆழ்ந்த கவலை தெரிவித்துக் கொண்டனர். தனது படைகளை பயன்படுத்தி மற்ற நாட்டின் எல்லைகளைப் பிடிக்கக் கூடாது என்பதை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மிகவும் மோசமான நிலையில் உள்ள மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உயர்தரமான கல்வி கிடைப்பதை உறுதிசெய்வது என்றும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சியால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள ஜி20 நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி20 மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : G20 Conference ,Delhi ,18th Summit of the G20 Organisation ,Bharat hall ,Pragati Ground ,G20 ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...