×

முதல்வர் பற்றி அவதூறு பேச்சு: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நேரில் ஆஜராக உத்தரவு

விழுப்புரம்: தமிழக அரசை தரக்குறைவாக விமர்சித்து பேசியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகம் மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த நாட்டார் மங்கலத்தில் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளருமான சி.வி. சண்முகம் எம்.பி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக அரசையும், தமிழக முதல்வரையும், தரக்குறைவாகவும் அவதூறாகவும் விமர்சித்து பேசியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் சுப்பரமணியம் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை நேற்று விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெறும் என்றும் அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட சி.வி. சண்முகம் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

The post முதல்வர் பற்றி அவதூறு பேச்சு: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நேரில் ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Tags : minister ,C. CV Sangmukam ,Vilappuram ,Former Minister ,Salamukam ,Viluppuram ,Tamil Nadu government ,Former ,C. ,
× RELATED பதவி கேட்டு எம்எல்ஏக்கள் நெருக்கடி:...