×

இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் தேசியவாத காங்கிரசில் பிளவு எதுவுமில்லை: தேர்தல் கமிஷனிடம் சரத்பவார் அணி திடீர் பதில் மனு


மும்பை: தேசியவாத காங்கிரசில் இரு அணிகளாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது கட்சியில் பிளவு எதுவுமில்லை என்று தேர்தல் ஆணையத்திடம் சரத்பவார் அணியினர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். ேதசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தலைமையில் செயல்பட்டு வந்த நிலையில், அவரது உறவினரான அஜித் பவார் தலைமையிலான எம்எல்ஏக்கள், மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர்.

அதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. ஆனால் கட்சியின் ெபயர், சின்னம், கட்சியின் கட்டுப்பாடு ெதாடர்பான உரிமை கோரல் விவகாரத்தில், சரத்பவார் தரப்பும், அஜித் பவார் தரப்பும் தீவிரம் காட்டவில்லை. ஆனால் இவ்விவகாரம் தொடர்பாக கடந்த ஜூன் 30ம் தேதி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் அஜித் பவார் தரப்பு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக அஜித் பவாரை தேர்வு செய்துள்ளதாக தெரிவித்தது. மேலும் தாங்கள் தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்றும் அதில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம், கட்சிக் கட்டுப்பாடு தொடர்பான விவகாரத்தில், எங்களது கட்சியில் எந்த பிளவும் இல்லை என்று அக்கட்சியின் சரத்பவார் அணியினர் தலைமை தேர்தல் ஆணையத்திடம் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதனால் தேசியவாத காங்கிரஸ் இரு அணியாக செயல்பட்டு வந்த நிலையில், சரத்பவார் அணியினர் கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை என்று பதில் மனு தாக்கல் செய்துள்ளதால் மீண்டும் தேசியவாத காங்கிரஸ் ஒன்றிணைகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

The post இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் தேசியவாத காங்கிரசில் பிளவு எதுவுமில்லை: தேர்தல் கமிஷனிடம் சரத்பவார் அணி திடீர் பதில் மனு appeared first on Dinakaran.

Tags : nationalist congress ,saratbhawar ,election ,Mumbai ,Election Commission ,Saradhawar ,Dinakaran ,
× RELATED 5 மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு...