×

ஜி-20 மாநாட்டு பகுதியில் ஆட்டோவில் வெடிகுண்டு?.. போலி பதிவு ஆசாமி கைது


புதுடெல்லி: ஜி-20 மாநாடு நடக்கும் பகுதியில் வெடிகுண்டுடன் ஆட்டோ செல்வதாக டுவிட்டரில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். டெல்லியின் பிரகதி மைதானத்தில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இன்று தொடங்குவதால், 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பிரகதி மைதானத்தை நோக்கி துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் ஆட்டோ ஒன்று செல்வதாக மாவட்ட போலீஸ் டிசிபியை டேக் செய்து ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதிர்ச்சியடைந்த போலீசார், டுவிட்டரில் குறிப்பிடப்பட்ட ஆட்டோவின் பதிவு எண்ணை கண்டுபிடித்து, அந்த ஆட்டோ டிரைவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

தொடர் விசாரணையில், போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து டுவிட்டரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குல்தீப் ஷா என்பவரை கண்டுபிடித்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக ஆட்டோ உரிமையாளருக்கும், குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகவும், அதனால் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவந்தது.

The post ஜி-20 மாநாட்டு பகுதியில் ஆட்டோவில் வெடிகுண்டு?.. போலி பதிவு ஆசாமி கைது appeared first on Dinakaran.

Tags : G-20 ,Asami ,New Delhi ,G-20 conference ,G-20 Conference Area ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...