×

மாநில அரசுகளை பலவீனப்படுத்தவே ஒரே நாடு, ஒரே தேர்தல் கொண்டுவரப்படுகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

காரைக்குடி: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநில அரசுகளை பலவீனப்படுத்தவே கொண்டுவரப்படுகிறது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற 6 மாநிலங்களில் நடந்த 7 தொகுதி இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கேரளா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம். ஜார்க்கண்டில் அந்தந்த மாநில பிரதான கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பதை இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

உ.பி.யில் 40,000 வாக்கு வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் வென்றது, பாஜகவை வீழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாகியுள்ளது. இந்தியா கூட்டணியை பார்த்து பாஜக பயப்படுவதால் இந்தியா என்ற பெயரை அக்கட்சி எதிர்க்கிறது. பாரத் என்று வைத்திருந்தால் இந்தியா என்ற பெயரை பாஜக எதிர்த்திருக்காது. இந்தியா என்ற பெயரை மாற்ற அரசியல் சாசனத்தில் குறைந்தபட்சம் 5-திருத்தங்களையாவது செய்ய வேண்டும். அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய பாஜக முயற்சிக்கும்; ஆனால் திருத்தம் செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநில அரசுகளை பலவீனப்படுத்தவே கொண்டுவரப்படுகிறது. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடியும்; அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இந்தியா கூட்டணியில் செயற்குழு கூட்டத்தை கூட்டி தேர்தல் வியூகத்தை தலைவர்கள் வகுப்பார்கள். நாங்கள் பாரத்துக்கு விரோதிகள் அல்ல; ஆனால் பாஜக இந்தியாவுக்கு விரோதமானது. இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவதில் பாஜகவுக்கு என்ன நோக்கம் என்றே தெரியவில்லை இவ்வாறு கூறினார்.

The post மாநில அரசுகளை பலவீனப்படுத்தவே ஒரே நாடு, ஒரே தேர்தல் கொண்டுவரப்படுகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : p. Chidambaram ,Karaigudi ,p. Sidambaram ,Dinakaran ,
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...