×
Saravana Stores

போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கான மெகா மருத்துவ முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்

சென்னை: போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கான மெகா மருத்துவ முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் சென்னை பெருநகரில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை மற்றும் Rotary International Dist 3232 இணைந்து சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழு மூலம் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று (09.09.2023) காலை வேப்பேரி, அகர்வால் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு, போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான மெகா முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டார். இம்மருத்தவ பரிசோதனை முகாமில் கண் பரிசோதனை (Eye Check-up), ரத்த சர்க்கரை அளவு சரிபார்த்தல், காசநோய் பரிசோதனை (TB Detection), நீரழிவு நோய் பரிசோதனை (DIABETIC), இருதய நோய் பரிசோதனை (CARDIO) காது, மூக்கு தொண்டை பரிசோதனை (ENT), எலும்புகள் (ORTHO) சம்பந்தமான பரிசோதனை, பெண்கள் நலம் (Women Wellness), பல் பிரச்சனைகள் (Dental), மன நலம் (Mental Health) மற்றும் முழுமையான ஆரோக்கியம் (Holistic Wellness) போன்ற மருத்துவ பரிசோதனைகள் உட்பட முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இம்மருத்துவ பரிசோதனை முகாமில் 200 போக்குவரத்து ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் R.சுதாகர், இ.கா.ப, போக்குவரத்து இணை ஆணையாளர்கள் N.M.மயில்வாகணன், இ.கா.ப (போக்குவரத்து தெற்கு), அபிஷேக் தீக்ஷித், இ.கா.ப (போக்குவரத்து வடக்கு) துணை ஆணையாளர் சமே சிங் மீனா, இ.கா.ப (போக்குவரத்து கிழக்கு), காவல் அதிகாரிகள் மற்றும் Rotary International Dist 3232 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

The post போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கான மெகா மருத்துவ முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metropolitan ,commissioner ,Sandip Rai Rathore ,Mega Medical ,Camp for Traffic Guilders ,Mega Medical Camp ,Transport ,Guilders ,Sandip Roy Rathore ,for Traffic Cars ,police Commissioner ,
× RELATED பொதுமக்கள் குறை தீர் முகாமில்...