×

மணக்காலில் ருக்மிணி கல்யாணம்

ஸ்ரீமணக்கால் நம்பிகள் அவதரித்த தலமான மணக்கால் அக்ரஹாரம், ஸ்ரீவரதராஜ பெருமாள் சந்நதியில், 64-ஆம் ஆண்டு ஸ்ரீருக்மிணி கல்யாண மஹோத்சவம் மற்றும் நாம சங்கீர்த்தனம் நடக்கவுள்ளது. பின்வரும் தேதிகளில், 31.8.2023 முதல் 5.9.2023 வரை தினமும் இரவு 8.00 மணி முதல் அகண்ட திவ்ய நாம பஜனையும், 6.9.2023 அன்று இரவு ஸ்ரீகோகுலாஷ்டமி பஜனையும், ஸ்ரீகிருஷ்ண ஜனன படனம் உபந்நியாசம், அதனை தொடர்ந்து திவ்ய நாம பஜனையும், 7.9.2023 அன்று வெண்ணெய்க் தாழி சேவை திருவீதி உலா.

அதை தொடர்ந்து, உறியடி உற்சவம். 8.9.2023 அன்று மதியம் 1.00 மேல் “ஸ்ரீருக்மிணி கல்யாண மஹோத்சவம். 9.9.2023 அன்று, ஸ்ரீஆஞ்சநேய உத்சவம் ஏகாந்த சேவை ஊஞ்சல், தொடர்ந்து திவ்ய நாம பஜனையும் நடைபெறுகிறது. திருக்கல்யாணம் செய்து கொள்ளும் பகவானை கண்டுகளித்து சகல நன்மைகளையும் பெறுவோம்.

தொகுப்பு: குடந்தை நடேசன்

The post மணக்காலில் ருக்மிணி கல்யாணம் appeared first on Dinakaran.

Tags : Rukmini Kallyana ,Marakkal ,Srivaradaraja ,Srivardaraja Perumal Sannati ,Srirukmini ,Kallyana ,Mahotsavam ,Rukmini Kallyam ,
× RELATED நெல்லை வரதராஜ பெருமாள் கோயில்...