×

சர்வதேச நிதி அமைப்புகளைச் சீரமைக்க ஜி 20 தலைவர்கள் ஒப்புதல்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி

டெல்லி: சர்வதேச நிதி அமைப்புகளைச் சீரமைக்க ஜி20 தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜி20 மாநாடு தீர்மானம் தொடர்பாக டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்தை பகிர்ந்து கொள்வோம் என்பதே ஜி 20 தலைமையின் தகவல். இந்தியா தலைமையின் கீழ் ஆப்பிரிக்க யூனியன் ஜி 20 அமைப்பின் நிரந்தர உறுப்பினரானது திருப்தியளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

The post சர்வதேச நிதி அமைப்புகளைச் சீரமைக்க ஜி 20 தலைவர்கள் ஒப்புதல்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : G20 ,Union Minister ,Jaishankar ,Delhi ,Jaisankar ,G20 Conference ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் வாக்களித்தார்..!!