×

நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் நீட்டிப்பு

நெல்லை: நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் ஞாயிற்று கிழமை தோறும் இயக்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை கணக்கில் கொண்டு இந்த ரயிலை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் வரும் 17 மற்றும் 24ம் தேதி ஞாயிற்றுகிழமைகளில் மாலை 4.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுதினம் காலை 4.10 மணிக்கு தாம்பரம் போய் சேரும்.

மறுமார்க்கமாக தாம்பரம் – நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் (எண். 06011) வரும் 18 மற்றும் 25ம் தேதி திங்கள்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 10.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரயில்களில் ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டி, 5 மூன்றடுக்கு ஏசி பெட்டி, 11 ஸ்லிப்பர் பெட்டிகள், 2 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுதிறனாளிகள் பெட்டி இடம் பெற்றிருக்கும். இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் சென்றடையும்.

The post நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Nagarkovil ,Thambaram Special Train Extension ,Paddy ,Tambara ,Nagarko ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயம்