×

மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி பசுமலைத்தேரியில் தகனம்..!!

தேனி: இயக்குநரும் நடிகருமான மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி பசுமலைத்தேரியில் தகனம் செய்யப்பட்டது. சென்னையில் தொலைக்காட்சி தொடருக்கு நேற்று டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் மாரிமுத்து மரணமடைந்தார். வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட உடலுக்கு வழிநெடுகிலும் ரசிகர்கள், மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மாரடைப்பால் காலமான நடிகர் மாரிமுத்துவின் உடல் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

The post மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி பசுமலைத்தேரியில் தகனம்..!! appeared first on Dinakaran.

Tags : Marimuthu ,Theni Green ,Chennai ,
× RELATED மூச்சுத்திணறலால் நடிகர் திடீர் மரணம்