×

பாளையில் ரூ.16 கோடியில் புதுப்பிக்கப்பட்ட சவேரியார் பேராலயம் திறப்பு, அர்ச்சிப்பு விழா

*திரளான இறை மக்கள் பங்கேற்பு

நெல்லை : பாளையில் ரூ.16 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட சவேரியார் பேராலய திறப்பு மற்றும் அர்ச்சிப்பு விழா நடந்தது. இதில் பாதிரியார்கள், கிறிஸ்தவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். பாளையங்கோட்டை தெற்குபஜாரில் ரூ.16 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட சவேரியார் பேராலய திறப்பு மற்றும் அர்ச்சிப்பு விழா நடந்தது. விழாவில் பேராலயத்தின் நுழைவு வாயிலை மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி திறந்து வைத்தார்.

ஆலய மணியை அர்சித்து கல்வெட்டுகளையும் மற்றும் ஆலய முன்பக்க கதவுகளை பாளை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் திறந்து வைத்தார். ஆலய மணிகள் ஒலிக்க இறை மக்களுக்கு அழைப்பு விடுத்து ஆலயத்தை மந்திரித்து பாளை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து விழாவில் நற்கருணை ஆசீர் நடந்தது.

விழாவில் பாளை மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ் அடிகளார், மறை மாவட்ட பொருளாளர் அந்தோணிசாமி அடிகளார், செயலக முதல்வர் ஞானபிரகாசம், காமநாயக்கன்பட்டி பங்குதந்தை அந்தோணி குரூஸ் அடிகள், முன்னாள் பங்குதந்தை ராஜேஷ், முன்னாள் முதன்மை குரு டெரன்ஸ், புளியம்பட்டி பங்குதந்தை மோட்சராஜன், கல்லிடைக்குறிச்சி வட்டார அதிபர் அருள்அந்தோணி, முன்னாள் பங்குதந்தை அந்தோணிராஜ், செட்டிகுளம் பங்குதந்தை ஜோமிக், பங்குதந்தை மைக்கேல் ராசு, அந்தோணி பள்ளி தாளாளர் அந்தோணிசாமி, கலைமனை முதல்வர் ஹென்றி ஜேரோம், பேராலய பங்குதந்தை சந்தியாகு மற்றும் மறை மாவட்ட குருக்கள், சவேரியார் கலைமனைகள் குருக்கள், திரு இருதய சபை சகோதரர்கள் ஆகியோர் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில் மைக்கேல் குரூப் ஆப் கம்பெனிஸ், மத்திய மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராஜேஷ், ஜெகன், மெல்வின்ராஜா பிரிட்டோ, நெல்லை பழைய நாணயம் அன்ட் தபால் தலை சேகரிப்போர் சங்க தலைவர் நோபிள்ராஜ், பொதிகை எண்டர்பிரைசஸ் ஆரோக்கிய ஜோசப் பீட்டர், நெல்லை மத்திய மாவட்ட திமுக பாளை மண்டல சேர்மன் பிரான்சிஸ், 52வது வட்ட செயலாளர் அரசு ஒப்பந்தகாரர் அந்தோணி, ஸ்டீபன்ராஜ், வீனஸ் கிளாஸ் ஒர்க்ஸ் பவுல் பீட்டர்,

ரப்பிஸ், குடிநீர் வடிகால் வாரிய ஓய்வுபெற்ற இன்ஜினியர் விஜயபாலன், ராயன் கன்ஸ்ட்ரக்‌ஷன் உரிமையாளர் லெனின், ஆர்க்கிடெக்ட் கிங்ஸ்லின் ராயன், அன்னை ஸ்டோர்ஸ் ராபர்ட், சூசை ஹார்டுவேர்ஸ் ஆஞ்சிஸ், வின்சென்ட் ஏஜென்சிஸ் ஜோஸ்ராபின், பிரின்ஸ் சர்ஜிக்கல் ராஜ்குமார், பாத்திமா கார் ஜூவலர்ஸ் கிறிஸ்டோபர், ஸ்காட் கல்லூரி சேர்மன் கிளிட்டஸ்பாபு, அமலன் டிம்பர் டிப்போ அமலன், ஜான்சன் டிம்பர் ஜான்சன், செய்தி தொடர்பாளர் விஜயகுமார்,

அசன விருந்து தொடர்பாளர் கண்மணி நாடார், மனுவேல், திரு இருதய ஆண்டவர் பேராலயம் நிதிகுழு தனசேகரபாண்டியன், மல்லிகை கேட்டரிங் சர்வீஸ் ரபேல், ஜோசப் பேக்கரி இருதயம், வர்கீஸ் ரியல் எஸ்டேட் நிர்வாக உரிமையாளர் குமார் வர்கீஸ்ராஜ், மைக்கிள் பிரபாகர் என்ற பிரபு, அன்னை மெட்டல்ஸ் ராஜன், வெங்கடேஸ்வரா வுட் ஒர்க்ஸ் உரிமையாளர் முருகன், லாரன்ஸ் டைல்ஸ் ஸ்டேன்லி, மாநகராட்சி 34வது வா்ர்டு கவுன்சிலர் ஷர்மிளா கமாலுதீன்,

55வது வட்ட கழக செயலாளர் அந்தோணி, ரோஸ் பில்டர்ஸ் அருள்வின் ரொட்டரிக்கோ, 8வது வார்டு கவுன்சிலர் மேரி குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜெரால்ட், பாளை அதிமுக வடக்கு பகுதி செயலாளர் ஜெனி, அன்னை வெல்டிங் ஒர்க்ஸ் உரிமையாளர் ஜோசப், ஜே.ஜே.செராமிக் ஜெயா செல்வ ரீகா, கிளாரா பில்டர்ஸ் இன்னாசி ஜேம்லஸ், கமலேஷ் ஜார்ஜ், அன்டன் சவுண்ட்ஸ் சுதந்த்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். ெதாடர்ந்து நடந்த அசன விருந்தில் திரளானோர் பங்கேற்றனர்.

The post பாளையில் ரூ.16 கோடியில் புதுப்பிக்கப்பட்ட சவேரியார் பேராலயம் திறப்பு, அர்ச்சிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Saveriar Cathedral ,Palai ,Nella ,Saveriar Temple ,
× RELATED பாளையங்கோட்டையில் படுகொலை...