
சென்னை: ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் எதிர்க்கட்சி தலைவர் கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் உலக தலைவர்களுக்கு அளிக்கப்படும் விருந்துக்கு எதிர்க்கட்சி தலைவர் அழைக்கப்படவில்லை. ஒன்றிய அரசின் நடவடிக்கையை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. ஜனநாயகமில்லாத, எதிர்க்கட்சிகளே இல்லாத ஒரு நாட்டில்தான் இதுபோன்ற செயல்கள் நடக்கும் என ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.
The post ஜனநாயக நாட்டில் உலக தலைவர்களுக்கு அளிக்கப்படும் விருந்துக்கு எதிர்க்கட்சி தலைவர் அழைக்கப்படவில்லை: ப.சிதம்பரம் கண்டனம் appeared first on Dinakaran.