×

நத்தம் அருகே கோட்டைப்பட்டியில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்

நத்தம், செப். 9: நத்தம் அருகே பிள்ளையார்நத்தம் ஊராட்சி கோட்டைப் பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் சுகாதார பணிகள் துணை இயக்குனர் வரதராசன் ஆலோசனையின் பேரில் நத்தம் வட்டார பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை நத்தம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஊராட்சித் தலைவர் தேன்மொழி முருகன், துணைத்தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா வரவேற்றார்.

இதில் டாக்டர்கள், செவிலியர் , கிராம சுகாதார செவிலியர், தொழில்நுட்பவியலாளர்கள் என சுமார் 40க்கும் மேற்பட்டோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் கர்ப்பிணி பெண்களுக்கான ஸ்கேன் பரிசோதனை, இரத்தம், நீர், சளி பரிசோதனை, இசிஜி, எக்ஸ்-ரே போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பொது, தாய் – சேய் நலம், காது மூக்கு தொன்டை, கண், பல், எலும்பு மூட்டு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முக சுந்தரம், திமுக வைச் சேர்ந்த மாவட்ட பிரதிநிதி ராமன், சிறுபான்மை பிரிவு அய்யூப் கான், நிர்வாகிகள் சேகர், பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கோட்டைப்பட்டி, சரளைப்பட்டி, நயினா கவுண்டன்பட்டி, பிள்ளையார் நத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

The post நத்தம் அருகே கோட்டைப்பட்டியில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Kodapatti ,Nattam ,Natham ,Kotpadti ,Pilliyarnattam ,
× RELATED நத்தம் அருகே கோயில் திருவிழாவில் கழுமரம் ஏறி அசத்திய இளைஞர்கள்