×

கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பராமரிப்பு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை, செப். 9: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில், அழகர்கோவில் சாலையில் உள்ள, கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பாக, நேற்று முரசு கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதற்கு மாவட்ட தலைவர் மாரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்புச்செல்வம், மாநில பொதுச்செயலாளர் வைரவன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மணிகண்டன், வேல்முருகன் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, 41 மாத பணிநீக்க காலத்தை வரைமுறைப்படுத்துவது, ஊதிய உயர்வு, இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்குவது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பராமரிப்பு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu Highways Department Road Maintenance Staff Association ,Alagharkoil Road ,
× RELATED மதுரை தோப்பூரில் வழிப்பறி...