
காளையார்கோவில்: காளையார்கோவில்(கிழக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ்அமலநாதன் தமிழக அரசு வழங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ளார். இவருக்கான பாராட்டு விழா காளையார்கோவிலில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத்தலைவர் ஜோஸ்பின்மேரி தலைமை வகித்தார். மாணவர்கள் சந்தனமாலை அணிவித்து வரவேற்றனர். பிடிஏ தலைவர் ராஜா, எஸ்எம்சி தலைவர் பூமணி, முன்னாள் மாணவர் சங்க அமைப்பாளர் குணஹாசன், பெற்றோர்கள், ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்றத்தலைவர் ஜோஸ்பின் மேரி பேசுகையில், தலைமை ஆசிரியர் தாமஸ் அமலநாதன் மேற்கொண்ட பணிகளால்தான் இன்று இப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 460 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்தார். தலைமை ஆசிரியர் தாமஸ் அமலநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
The post நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.