×

போரூரில் மெட்ரோ ரயில் பணியின்போது ராட்சத துளையிடும் இயந்திரம் வீட்டின் மீது மோதி விபத்து: 3 பேர் உயிர் தப்பினர்

பூந்தமல்லி, செப். 9: மெரினா கலங்கரை விளக்கம் – போரூர் இடையே மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு போரூர், ஆற்காடு சாலையில் மேம்பால தூண் அமைக்க பூமியில் துளை போடும் பணியின்போது ஒப்பந்த ஊழியர்களின் கவனக்குறைவினால் 100 டன் எடையிலான ராட்சத துளையிடும் இயந்திரம், சுமார் 200 அடி உயரத்திலிருந்து அங்கு அஞ்சுகம் நகரில் பாக்கியநாதன் என்பவரின் வீட்டின்மீது வேகமாக மோதியது. இதில், அந்த வீட்டின் மேல்தள சுவர் மற்றும் மேற்கூரை உடைந்து சிதறியது. இதனால், பாக்கியநாதன் மற்றும் குடும்பத்தினர் அலறியடித்து வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்ததும் போரூர் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், மெட்ரோ ரயில் பணிக்காக துளையிட பயன்படுத்தப்படும் ராட்சத இயந்திரம் 200 அடிக்கு மேல் உயரம் கொண்டது. சாய்வான நிலையில் இருக்கும் இயந்திரத்தை செங்குத்தாக நிலைநிறுத்தி துளையிடும் பணிக்கு பயன்படுத்த வேண்டும். எனினும், அப்படி இயந்திரத்தை நிலைநிறுத்தும்போது, பின்னால் இருக்கும் வீட்டை கவனிக்காமல் ஆபரேட்டர் கவனக்குறைவாக செயல்பட்டதால் விபத்து நடைபெற்றதாக தெரியவந்தது.

The post போரூரில் மெட்ரோ ரயில் பணியின்போது ராட்சத துளையிடும் இயந்திரம் வீட்டின் மீது மோதி விபத்து: 3 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Borur ,Poonthamalli ,Metro Railway ,Marina ,Lighthouse ,
× RELATED சென்னையில் அடுக்குமாடி...