×

மழலையர் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கிருஷ்ணர், ராதை வேடமணிந்த இஸ்லாமிய குழந்தைகள்

உத்திரமேரூர், செப்.9: உத்திரமேரூர் அருகே உள்ள மழலையர் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில், இஸ்லாமிய தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு, கிருஷ்ணர், ராதை வேடமணிந்து அழைத்து வந்திருந்தனர். உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் மழலையர் தொடக்கப்பள்ளியில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்கள் மழலை வார்தைகளால் சில பாடல்கள் பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தனர்.

இந்நிகழ்வில், மிகவும் ஆச்சரியப்பட வைக்கப்பட்ட சம்பவம் என்னவென்றால், இதே பள்ளியில் இஸ்லாமிய தம்பதியர்களின் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். அந்த பெற்றோர், தங்களது ஆண் குழந்தைக்கு கிருஷ்ணர் வேடமும், பெண் குழந்தைக்கு ராதை வேடமும் இட்டு பள்ளிக்கு ஆர்வத்துடன் அழைத்து வந்தனர். இதில், 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் வேடமிட்டு வந்த பேதிலும் இந்த இஸ்லாமிய தம்பதியர், தங்கது குழந்தைளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு அழைத்து வந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அவர்களை அனைவரும் பாராட்டினர். இதில், கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் தாஜுதீன்அகமது தலைமை தாங்கினார். சாலவாக்கம் ஊராட்சி தலைவர் சத்தியாசக்திவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை கவிதா வரவேற்றார்.

The post மழலையர் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கிருஷ்ணர், ராதை வேடமணிந்த இஸ்லாமிய குழந்தைகள் appeared first on Dinakaran.

Tags : Krishna Jayanti Festival ,Krishna ,Radha ,Uttaramerur ,
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...