×

கீழநீலிதநல்லூரில் ரூ.30 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம்

சங்கரன்கோவில்,செப்.9: சங்கரன்கோவில் அருகே கீழநீலிதநல்லூர் கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை வகித்தார். கீழநீலிதநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கோதை அம்மாள் பாபு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு பல்நோக்கு கட்டிடம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி தலைவர் பாபு, மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு தலைவர் மரியலூயிஸ்பாண்டியன், மாவட்ட ஆதிதிராவிடர் நல தலைவர் ராஜ் கருப்பசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் தனசேகரன், மாவட்ட பிரதிநிதி சண்முக பாண்டியன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜானகி, கிளை செயலாளர்கள் முத்துராமலிங்கம், ராஜேந்திரன், மைனர்சாமி, பரஞ்சோதி, தங்கத்துரை, இளைஞர் அணி சிவா, மாதவன், பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கீழநீலிதநல்லூரில் ரூ.30 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Keezaneelithanallur ,Sankarankoil ,
× RELATED சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ விலை கிடு கிடு உயர்வு..!!