×

₹2.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரம், செப்.9: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையின் உபகிளையான மாமுண்டியில் பருத்தி ஏலம் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து, 150 மூட்டை பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்து குவித்தனர். சுரபி ரகம் குவிண்டால் ₹6890 முதல் ₹7909 வரையிலும், பி.டி ரகம் ₹6010 முதல் ₹7330 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ₹2.50 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ₹2.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mallasamudram ,Mamundi ,Thiruchengode Agricultural Producers Cooperative Marketing Society.… ,
× RELATED கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்