×

மீன் விற்பனை அங்காடி திறப்பு

தர்மபுரி, செப்.9: தினகரன் செய்தி எதிரொலியாக ஒட்டப்பட்டியில் மீன் விற்பனை அங்காடி நேற்று திறக்கப்பட்டது. தர்மபுரி அருகே உள்ள ஒட்டப்பட்டியில், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மீன்வளத்துறையின் சார்பில், மீன் விற்பனை அங்காடி செயல்பட்டு வந்தது. இந்த அங்காடியில் வாரத்தில் ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் கடல் மீன், நண்டு, இறால் உள்ளிட்ட மீன்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், பல வருடங்களாக மூடிக்கிடந்ததால், மது அருந்தும் பாராக மாறியது.

இது குறித்து கடந்த 7ம் தேதி, தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில், மாவட்ட மீன்வளத்துறை சார்பில், ஒட்டப்பட்டியில் உள்ள மீன் விற்பனை அங்காடி நேற்று திறப்பு விழா நடந்தது. திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மீன் விற்பனை அங்காடியை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை ஆய்வர் அசினாபானு, திமுக நிர்வாகி பொன்னரசு, ஒன்றிய கவுன்சிலர் சோனியாகாந்தி வெங்கடேசன், கூட்டுறவு சொசைட்டி உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் தலைவர் நாகராஜ், திமுக தொழில்நுட்ப அணி கவுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மீன் விற்பனை அங்காடி திறப்பு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Ottapatti ,Dhinakaran ,Fish Shop ,Dinakaran ,
× RELATED செல்போன் திருடிய வாலிபர் கைது