
- திண்டியம் எம்.புதூர்
- பிடாரியம்மன் கோவில்
- தீர்த்து
- விஸ்ஹா
- தானியம்
- எம்.புதூர் பிடாரியம்மன்
- தாங்கியம்…
- தாங்கியம்
- எம்.புதூர்
- தேர்த்திருவிழா
தொட்டியம்: தொட்டியம் எம்.புத்தூர் பிடாரியம்மன்கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு 27 அடி உயர தூக்குதேரை பக்தர்கள் தோளில் சுமந்து சென்றனர். தொட்டியம் அருகே எம்.புதூரில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் மற்றும் பிடாரி அழகு நாச்சியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா நடைபெற்றது. முன்னதாக மகா மாரியம்மன் திருவிழாவும், அதனை தொடர்ந்து பிடாரி அழகு நாச்சியம்மன் கோயில் தேர்திருவிழாவும் நடைபெற்றது. கடந்த 30 ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. பின்பு கடந்த ஐந்தாம் தேதி திருத்தேர் தலையலங்காரம், திருத்தேர் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் நாள் எம்.புத்தூரிலும், இரண்டாம் நாள் சுருட்டை பாளையம், மூன்றாம் நாளான நேற்று மதியம் சுமார் 27அடி உள்ள தூக்கு தேரை துணியாலும், பூக்களாலும் அலங்கரித்து பக்தர்கள் தங்களது தோளிலும், தலையிலும் சுமந்து இலந்தமடைப்புதூர் கிராமத்திற்கு வயல்வெளிகளிலும் தோட்டங்களிலும் தூக்கி வந்தனர். பின்பு இலந்தமடைப்புதூரில் திருத்தேருக்கு எல்லை உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இலந்தமடைப் புத்தூருக்கு வந்த திருத்தேர் பக்தர்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று தொட்டியபட்டிக்கும் அதைத்தொடர்ந்து சத்திரம் மூவேலி காரைக்காடு ஆகிய கிராமத்திற்கு தொடர்ந்து திருத்தேர் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது. இதில் எம். புத்தூர், சுருட்டை பாளையம், இலந்தமடைபுத்தூர், தொட்டியபட்டி, சத்திரம், மூவேலி, காரைக்காடு, ஆகிய ஏழு ஊர்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் காட்டுப்புத்தூர் போலீசார் ஈடுபட்டனர்.
The post தொட்டியம் எம்.புத்தூர் பிடாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா appeared first on Dinakaran.