×

குமார் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு அழைப்பு

உடுமலை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 17ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி திருப்பூர் மாநகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. நாளை (ஞாயிறு) மாலை 6 மணியளவில் திருப்பூர் பாண்டியன் நகரில் நடை பெற உள்ள இந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்து கொள்ள உள்ளார். எனவே கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இந்த பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் கே.டி.எஸ்.ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

 

The post குமார் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Kumar ,Udumalai ,All ,India Equality People ,Party ,Tirupur ,Dinakaran ,
× RELATED கல்வி நிறுவனங்களில் களைகட்டிய பொங்கல் விழா