
உடுமலை: உடுமலையை அடுத்துள்ள தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய பசுமை படையின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை காசி மதி தலைமை தாங்கினார். தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் வரவேற்றார். அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சரவணன் இயற்கையை பாதுகாப்பதில் மாணவரின் பங்கு என்னும் தலைப்பில் மரம் நடுதலின் அவசியம் பற்றியும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும் சிறப்புரையாற்றினார். தேசிய பசுமை படை மாணவ, மாணவிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். முடிவில், சமூக அறிவியல் ஆசிரியை கலைச்செல்வி நன்றி கூறினார். திருப்பூரில் சரத்
The post சுற்றுச்சூழல் கருத்தரங்கம் appeared first on Dinakaran.