×

பாரதியார் பல்கலை. ஆசிரியர் சங்க தேர்தல்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில், உறுப்பினர்கள் இணைய வழியிலும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, 161 உறுப்பினர்களில் 157 உறுப்பினர்கள் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர். வாக்குப்பதிவு மதியம் 2 மணி வரை நடந்தது. 97.5 சதவீதம் வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் மாலையில் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தலைவராக தாவரவியல் துறை தலைவர் வசந்த், துணைத்தலைவர் கணினி பயன்பாட்டியல் துறை அமுதா, செயலாளர் மேலாண்மை துறை உமாதேவி, துணைச்செயலாளர் உயிர்த்தொழில்நுட்பவியில் கிரிஜா, பொருளாளர் கணினி பயன்பாட்டியல் துறை புவனேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், செயற்குழு உறுப்பினர்களாக அண்ணாதுரை, செல்வகுமார், ராஜேந்திரன், பிரேமா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  தேர்தல் அலுவலராக தாவரவியல் துறை தலைவர் பரிமேலழகன், துணை பதிவாளர் செல்வராசு தேர்தல் பார்வையாளராக பணியாற்றினர். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர்கள், பதிவாளர் தங்களின் பாராட்டுகளை தெரிவித்தனர்.

 

The post பாரதியார் பல்கலை. ஆசிரியர் சங்க தேர்தல் appeared first on Dinakaran.

Tags : Bharatiyar University ,Teachers union ,Coimbatore ,President ,Bharatiyar University Teachers Association ,Dinakaran ,
× RELATED மாணவர்களுக்கு மனநல ஆலோசனை: தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை