
முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர பொருளாளர் குலாம் ரசூல் தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைவேலன் முன்னிலை வகித்தார். இதில், தெற்கு தெரு பகுதியை சேர்ந்த மன்சூர் அலி தலைமையில் 25க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் அன்பு வீரமணி, இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஜெகபர் பாட்சா, எஸ்சி., எஸ்டி துறை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் லெனின், வட்டார காங்கிரஸ் தலைவர் கோவி.ரெங்கசாமி, மாவட்ட துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கபீர், அப்துல் ரஹ்மான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post முத்துப்பேட்டையில் மாற்று கட்சியினர் காங்கிரசில் இணையும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.