×

ஆளுநரை கண்டித்து தஞ்சாவூரில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

தஞ்சாவூர்: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன தேடுதல் குழுவை தன்னிச்சையாக அறிவித்துள்ள ஆளுநர் ஆர்.என் ரவி தனது அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் தலைமையில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் முன் போராட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் அர்ஜுன் போராட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சந்துரு போராட்டத்தை விளக்கி பேசினார். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன தேடுதல் குழுவை தன்னிச்சையாக அறிவித்துள்ள ஆளுநர் ஆர்.என் ரவி தனது அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். குமரன் நன்றி கூறினார். இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

The post ஆளுநரை கண்டித்து தஞ்சாவூரில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Governor ,RN Ravi ,Dinakaran ,
× RELATED கடந்த வாரம் சென்று வந்த நிலையில்...