×

9 கோடியில் சமுத்திரம் ஏரி புனரமைப்பு தீவிரம் பாபநாசம் வட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்

தஞ்சாவூர்: பாபநாசம் வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் இடையிருப்பு ஊராட்சியில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி, ஆதிதிராவிடர் தெருவில் தரைப்பாலம் பணிகள், குப்பை தரம் பிரிக்கும் மையம் கட்டிட பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து தரமாக முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம் இடையிருப்பு ஊராட்சியில் ஆதிதிராவிடர் தெருவில் ரூ. 5.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், திருக்கருகாவூர் ஊராட்சியில் ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் கிராம செயலக கட்டடத்தின் கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி, அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்தரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post 9 கோடியில் சமுத்திரம் ஏரி புனரமைப்பு தீவிரம் பாபநாசம் வட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் appeared first on Dinakaran.

Tags : Samudram ,Papanasam circle ,Thanjavur ,District Collector ,Deepak Jacob ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் குருதயாள் சர்மா பகுதியில்...